தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இராஜதந்திர மட்டத்தில் பேச்சு - சுசில்

Published By: Digital Desk 4

24 Dec, 2020 | 10:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 - தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இராஜதந்திர மட்டத்தில்  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.வெகுவிரைவி தடுப்பூசி  பெற்றுக்  கொள்ளப்படும் என தொலைநோக்கு கல்வி முறைமை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன்  செயற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையை அரசாங்கத்தினால் மாத்திரம்  தனித்து வெற்றிக் கொள்ள முடியாது.

தற்போது வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமைக்கு பல பொது  காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.  தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படாத. பல உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சர்வதேச மட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக். கொள்ள இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. வெகுவிரைவில் தடுப்பூசி  பெற்றுக் கொள்ளப்படும்.

அனைத்து துறைகளிலும் அரசியல்  தலையீடு  உள்ளன. என்று எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.அரச நிறுவனங்கள் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது சுயாதீனமாக செயற்படுகின்றன.

மஹர சிறைச்சாலை சம்பவம்  தொடர்பில் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு  இலக்காகியுள்ளதாக  அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.இந்த அறிக்கை நாட்டு மக்களுக்கு முழுமையாக பகிரங்கப்படுத்தப்பட்டது.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை முழுமையாக  மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும். அரசாங்கம் முறையாக செயற்படுகிறது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56