கொரோனாவை காரணம் காட்டி மக்களின் வாழ்வாதாரத்துடன் அரசு விளையாடுகிறது - ஜே.வி.பி சாடல்

Published By: Digital Desk 4

24 Dec, 2020 | 10:05 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனாவை காரணம் காட்டி அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் இயலாமை வெயிப்பட்டுள்ள நிலையில் கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக சாடியுள்ளது.

மக்கள் விடுதலை முண்ணணியின் தலைமைகயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய பிரசார செயலாளர் விஜித ஹேராத் கூறுகையில் ,

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக 2020 முதலாம் காலாண்டில் உள்நாட்டு விவசாய உற்பத்தி 5.6 வீதத்தால் வீழ்ச்சிக்கண்டிருந்தது. தொழிற்சாலைகள் துறை 7.8 வீதத்திலும் சேவை துறை 1.6 வீதத்திலும் வீழ்ச்சிக்கண்டது. மார்ச் மாதம் 19 திகதிற்கு பின்னரே நாடு முடக்கப்பட்டது. எனவே முதலாம் காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு கொரோனாவை காரணம் காட்ட முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் இயலாமையே இதன் ஊடாக வெளிப்படுகின்றது. மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எவ்வகையிலும் கொரோனா காரணமா இல்லை.  தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடமேரி மிக குறுகிய காலத்திற்குள் அத்தியாவசிய  உணவுப்பொருட்களின் விலை மிகவேகமாக  அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிப்பொருட்களின் விலை மறைப்புள்ளியில் காணப்பட்ட போதிலும் அதன் பயனை மக்களுக்கு இந்த அரசு வழங்க வில்லை. மக்கள் எவ்வகையில் சீரழிந்தாலும் அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை.  கொரோனாவை காரணம் காட்டி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.  

பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படுவதாக கூறிய போதிலும் அனைத்து பங்களிலும் வழமைப்போல் பயணிகள் தொங்கிக்கொண்டே செல்கின்றனர். மக்களின் சுகாதார பாதுகாப்பு எவ்வகையிலும் உறுதிப்படுத்தப்பட வில்லை.

அரசாங்கத்தால் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வரலாற்றில் முதல்த்தடவையாக தேங்காய்க்கு வர்த்தமானியை வெளியிட்டது.  வர்த்தமானியின் விலை மட்டங்களுக்கு தற்போது எங்குமே தேங்காய் கிடையாது. பொருளாதார மையங்கள் வர்த்தக அமைச்சரின் கீழ் இல்லை.  வீஞ்ஞான ரீதியானது எனக் கூறிக்கொள்கின்ற அமைச்சருக்கு அத்தியாவசிய நுகர்வுப் பண்டங்களை விற்பனை செய்கின்ற பொருளாதார மையங்கள் கிடையாது.

இவ்வாறிருக்கையில் மத்திய வங்கி புள்ளிவிபர விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. பஸ் கட்டணம், எண்ணெய் விலை, அத்தியாவசிய உணவப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கையில், மக்களின் வருமானம்  அற்றுப்போயுள்ள நிலைமையில் நாட்டின் பொருட்களின் விலைகள் சம்பந்தமாக மத்திய வங்கி பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக கூறுகின்றது.

முதலாவது கொரோனா அலையின் போது லொக்டவுன் பண்ணி கொடுத்த ரூ. 5000 ,ல் உயிர்வாழ முடியாது. தற்போது நிலைமை அதைவிட பாரதூரமானதாகும். அதனால் தான் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அது பற்றிய எந்தவிதமான கரிசனையுமின்றி அரசாங்கம் கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. 

எனவே உடனடியாக அத்தியாவசிய உணவுப்பண்டங்களின்  விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51