தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு மாத சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. நாட்­சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்ற நிலையில் இடைக்­கால கொடுப்­ப­ன­வையும் நாட்­சம்­பள அடிப்­ப­டை­யி­லேயே வழங்க முடியும். இந்­நி­லையில் கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதத்தில் 25 நாட்கள் வேலை வழங்­கு­வ­தனை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும் என்று பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் எஸ்.விஜ­ய­சந்­திரன் தெரி­வித்தார்.

அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா கொடுப்­ப­னவு பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­பள அடிப்­ப­டையில் வழங்­கப்­பட உள்­ளமை தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது­தொ­டர்பில் விஜ­ய­சந்­திரன் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பெருந்­தோட்டத் தொழிற்­துறை பல்­வேறு சவால்­க­ளையும் சந்­தித்து வரு­கின்ற நிலையில் அதனை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய ஒரு நிலை காணப்­ப­டு­கின்­றது. தோட்­டங்கள் அழி­வுப்­பா­தையில் இருந்து மீட்­டெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல துறை­க­ளிலும் தலை­நி­மிர்ந்து வாழக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாக்கிக் கொடுக்­கப்­ப­டுதல் வேண்டும். தொழி­லா­ளர்­களை அடக்கி ஆளும் முனைப்­புடன் கம்­ப­னிகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இதி­லி­ருந்து தொழி­லா­ளர்­களை மீட்­டெ­டுப்­ப­தோடு கம்­ப­னி­யி­னரின் கொட்­டத்­தி­னையும் எதேச்­ச­தி­கார செயற்­பா­டு­க­ளையும் அடக்க வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. பொரு­ளா­தா­ரத்­திற்கு ஓர­ளவு வலுச்­சேர்க்­கக்­கூ­டி­ய­வாறு இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபா தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட உள்­ளது. இது மகிழ்ச்­சிக்­கு­ரிய செய்­தி­யாகும். அந்­நி­லையில் அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ரூபா கொடுப்­ப­னவை நாட்­சம்­பள அடிப்­ப­டையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளமை தொடர்பில் தற்­போது விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. இங்கு நாம் ஒரு விட­யத்தை தெளி­வாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு மாத சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. நாட்­சம்­ப­ளமே இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. எனவே 2500 ரூபாவை மொத்­த­மாக வழங்­கு­வதில் சிக்கல் நிலை காணப்­ப­டு­கின்­றது. இத­னா­லேயே ஒரு நாளைக்கு 100 ரூபா என்ற அடிப்­ப­டையில் 25 வேலை நாட்­க­ளுக்கும் 2500 ரூபா என கணக்­கி­டப்­பட்டு வழங்­கப்­பட உள்­ளது. இதனை விமர்­சிப்­ப­வர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எதற்­கெ­டுத்­தாலும் குறை கூறு­கின்ற கலா­சா­ரத்­தையும் மாற்றிக் கொள்­ளுதல் வேண்டும். இங்கு 2500 ரூபா குறித்த விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­தனை விடுத்து கம்­ப­னிகள் கண்­டிப்­பாக 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற விட­யத்­துக்கு வலு­சேர்க்க வேண்டும். பல தோட்­டங்­களில் கம்­ப­னி­யினர் குறைந்­த­ள­வி­லான வேலை நாட்­களை வழங்­கு­வ­தாக புகார்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. குறிப்­பாக வாரத்தில் நான்கு, ஐந்து நாட்­களே சில தோட்­டங்­களில் வேலை வழங்­கப்­பட்டு வரு­வ­த­னையும் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இது தொழி­லா­ளர்­க­ளுக்கு பாத­க­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

கம்­ப­னிகள் 25 நாட்கள் வேலை கொடுத்­தால்தான் தொழி­லா­ளர்கள் உரி­ய­வாறு வேலைக்குச் சென்று இடைக்­கால கொடுப்­ப­னவை முழு­மை­யாக பெற்­றுக்­கொள்ள முடியும். கம்­ப­னிகள் வேலையை 25 நாட்கள் வழங்­கா­த­வி­டத்து என்ன செய்ய முடியும்? கம்­ப­னிகள் 25 நாட்கள் வேலை வழங்­கு­வ­தனை முதலில் உறு­திப்­ப­டுத்த வேண்

டும். கூட்டு ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் 25 நாட்கள் வேலை தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டுதல் வேண்டும் என்­ப­தையும் இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

நாட்டில் உள்ள விலை­வாசி அதி­க­ரிப்பு உள்­ளிட்ட நிலை­மை­களை கருத்தில் கொண்டு அர­சாங்கம் 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­ன­வினை பரிந்­து­ரைத்­தது. எனினும் தோட்டத் தொழி­லா­ளர்­களை பொறுத்­த­வ­ரையில் இவற்­றுடன் ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­துக்­கான கோரிக்­கைக்கே அழுத்தம் கொடுப்­பது அவ­சி­ய­மாக உள்­ளது. இடைக்­கால நிவா­ர­ணத்தை கருத்தில் கொண்டு தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைத்து விட்­டது என்ற கண்­ணோட்­டத்தில் நோக்­கு­வது பிழை­யாகும். தொழி­லா­ளர்­க­ளுக்கு தற்­போது 620 ரூபா நாட்­சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­டு­கின்ற நிலையில் இன்னும் 380 ரூபாவை அவர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது. தொழி­லா­ளர்கள் இதற்­கான போராட்­டத்­தையே முன்­னெ­டுத்­தனர். இ.தொ.கா.வின் கோரிக்­கையும் இது­வே­யாகும். எனவே 1000 ரூபாவை பெற்­றுக்­கொ­டுக்க உரிய போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாக உள்­ளது. ஒருநாள் உழைப்­புக்கு தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா கிடைப்­பதே நியா­ய­மா­னது. இன்று இலங்­கையில் உடல் உழைப்பை மையப்­ப­டுத்­திய அனைத்து தொழில்­க­ளுக்கும் குறைந்­த­பட்­ச­மாக நாளொன்­றுக்கு ஆயிரம் ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது. இவற்றுடன் உணவு, தேநீர் என்பனவும் கூட வழங்கப்படுவதனையும் கூறியாதல் வேண்டும் என்றார்.