போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

24 Dec, 2020 | 01:40 PM
image

(செ.தேன்மொழி)

பியகம பகுதியில் போலி நாணயத்தாள்களை தயாரித்து அவற்றை செல்லுபடியாகும் பணத்துடன் ஒன்று சேர்க்கும் மோசடியில் ஈடுபட்ட  மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

பியகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது இவர்களிடமிருந்து 14 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 33 250 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர்கள் தற்காலிகமாக வசித்து வந்த வீடொன்றிலிருந்து 5 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 11 860 ரூபாய் செல்லுபடியாகும் பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் தங்களிடமிருந்த போலி நாணயத்தாள்களை கொடுத்து, செல்லுபடியான பணத் தொகையை பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடுவெல மற்றும் சிலாபம் ஆகிய பகிதிகளைச் சேர்ந்த 26,42,48 வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அச்சு இயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39