நாடுபூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர் தொடர்ந்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 31 ஆம் திகதி காலை ஆரம்பமான குறித்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்று 4ஆவது நாளாக தொடர்கிறது.

வாயிற்காப்போர் கோரியுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் தொடர்ந்தும் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடந்து செல்கின்ற சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.