அங்கொட லொக்காவுக்கு சொந்தமான துப்பாக்கிகள், கைக்குண்டு மீட்பு

Published By: Digital Desk 3

24 Dec, 2020 | 10:10 AM
image

(செ.தேன்மொழி)

முல்லேரியா பகுதியில்  பாதாளகுழு தலைவரான அங்கொட லொக்காவுக்கு சொந்தமான துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் மகசின்கள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செலிஹினி மாவத்தையில் நேற்று புதன்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த , ஜேர்மன் நாட்டு துப்பாக்கி, துருக்கி நாட்டு துப்பாக்கி ஒன்றும், 30 கைக்குண்டுகளை போட்டு வைக்க கூடிய மகசினொன்றும், 15 கைக்குண்டுகளை வைக்கக்கூடிய மகசின்கள் மூன்றும் மற்றும் 14 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத ஆயுதங்கள் இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாளகுழு தலைவரான அங்கொட லொக்காவுக்கு சொந்தமானது என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த நவீன தரத்திலான துப்பாக்கிகள் எம் நாட்டு பாதுகாப்பு படையினரிடம் கூட இல்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31