பொரலஸ்கமுவ, கட்டுவாவ விகாரைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவேளையில் காரில் வந்தவர்கள் அவரின் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.