மஹர களேபரம் : மேலும் 4 சிறைக் கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முன்வைப்பு

Published By: Digital Desk 4

24 Dec, 2020 | 07:46 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தின் போது உயிரிழந்த 11 கைதிகளில் மேலும் 04 பேர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயம் மற்றும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக ஐவரடங்கிய விசேட நிபுணர்கள் குழு, வத்தளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த, நிபுணர்கள் குழு இந்த விடயம் தொடர்பில்  அறிவித்துள்ளது.

மரண பரிசோதனை மேற்கொண்டு   இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 04 கைதிகளின் சடலங்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வழங்கவும் நீதவான் தீர்மானித்துள்ளார்.

உயிரிழந்த கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்ததுடன், அதற்கு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார்.

எந்த கைதிகளுக்காக இந்த சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை முன்வைக்கின்றனர் என்பது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடாமையால், அவர்களுக்கு விடயங்களை முன்வைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அரச சட்டவாதி  மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான தீர்மானம்  எதிர்வரும் 30 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான், எதிர்வரும் 28 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, மஹர சிறையில் ஏற்பட்ட களேபரத்தின்  போது உயிரிழந்த 08 கைதிகளின் மரண பரிசோதனை இதுவரை  நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கைதிகளின் மரண விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27