பாராளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட நாம் கொண்டுவந்த மக்கள் வெள்ளம் பெறுமதிமிக்கது

Published By: Ponmalar

02 Aug, 2016 | 06:46 PM
image

(பா.ருத்ரகுமார்)

பாராளுமன்றத்தில் வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றி விடலாம் ஆனால் நாம் கொண்டுவந்த மக்கள் வெள்ளம் அந்த பெரும்பான்மையை விட அதிக பெறுமதிமிக்கதும் பலமானதுமென கூட்டு எதிரணியின்  பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

மேலும் 2 மில்லியன் மக்களை திரட்டி மாபெரும் வெற்றி பேரணியாக உருவாக்கி அரசாங்கத்தின் தான்தோன்றித்தனத்துக்கு கடிவாளமிட்டோம். அதேபோல மீண்டும் மக்களை திரட்டி கொழும்புக்குள் பிரவேசிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

என். எம் பெரேரா மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்  மகிந்தானந்த அழுத்கமகே

உலகில் நடைபெற்ற புரட்சிமிக்க பாதயாத்திரைகளுக்கு நிகராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை அமைந்தது. இவ்வளவு சக்திமிக்க போராட்டமாக இதனை மாற்றியதற்கு அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இதன்பின்னராவது அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறித்த பாதயாத்திரையை நாம் ஏன் முன்னெடுத்தோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாக வெளிக்காட்டி மக்களை ஏமாற்றலாம். ஆனால் மக்கள் தற்போது தெளிவான தீர்மானங்களுக்கு வந்துள்ளனர். இதன்காரணமாகவே இத்தனை மக்கள் கூட்டம் எமக்காக பெரும் அர்ப்பணிப்புக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையில் இணைந்துக்கொண்டனர்.

எனவே நாம் கடைசியாக உங்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். மீண்டும் ஒருமுறை பலமான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள இடமளிக்காது அராஜக தன்மையான ஆட்சியிலிருந்து விடுபடவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26