கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பி.சி.ஆர். பரிசோதனை: சுகாதார அமைச்சு

Published By: J.G.Stephan

23 Dec, 2020 | 06:42 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை இதய நோய்கள்  தொடர்பான  வைத்திய  சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் இங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை இதய நோய்கள்  தொடர்பான  வைத்திய சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 5 மில்லியன் ரூபா பெருமதியான பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த இயந்திரம் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது பரிசோதனைக்கான இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் இங்கும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதேவேளை தினமும் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களுக்கு பரிசோதனையை துரிதமாக முன்னெடுக்கவும் முடியும். இதற்காக சுகாதார அமைச்சர் ஹேமாஸ் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15