முஸ்லிம்களின் ஜனாசா எரிப்புக்கு எதிராக கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 04:50 PM
image

(நா.தனுஜா)

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருக்கும் நிலையில், எமது நாடு மாத்திரமே கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கிலான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. 

எமது நாட்டில் மேலும் அடிப்படைவாத செயற்பாடுகளைத் தூண்டுவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் பொரளை பொதுமயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருக்கும் நிலையில், எமது நாடு மாத்திரமே கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கிலான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. எமது நாட்டில் மேலும் அடிப்படைவாத செயற்பாடுகளைத் தூண்டுவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் நியாயமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என்று சுமார் ஒரு மாதகாலமாகக் காத்திருக்கிறோம். எனினும் நாம் வெறுமனே ஏமாற்றமே அடைந்திருக்கின்றோம். ஆகவே இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம். சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்று ஆராய்வதற்கான தொழில்நுட்பக்குழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் இனவாதிகளேயாவர்.

அவர்களுடைய ஆலோசனைகளுக்கு அமைவாக தீர்மானங்களை மேற்கொள்வதென்பது எமது சமூகத்திற்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். எனவே இதற்கு அரசாங்கம் விரைந்து நியாயமான தீர்வொன்றை வழங்காவிடின், இலங்கையில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகநாடுகளில் இருந்தும் இதற்கு எதிரான குரல்கள் எழும்பும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

ராஜித சேனாரத்ன

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன,

'கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதற்கு எவ்வித விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியிருக்கிறது. எனவே இதுகுறித்த தீர்மானம் மருத்துவ அடிப்படையின்றி, அரசியல் நோக்கிலேயே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நாம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நிலையேற்படுவதற்கு இடமளித்திருக்க மாட்டோம்' என்று குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட மேலும் பல ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38