போர்ட் சிட்டி அமைக்கப்படும் காணி சீனாவுக்கா இலங்கைக்கா சொந்தம் : அரசாங்கம் விளக்கம்

Published By: MD.Lucias

02 Aug, 2016 | 04:48 PM
image

சீன நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் நான்கு திருத்தங்களை செய்வதற்கு   அரசாங்கமும் குறித்த  சீ. எச். ஈ.சி. என்ற சீன நிறுவனமும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. 

அதன்படி   கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்தில்   காணிகள்  99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும்.  முன்னர்  இணக்கம் காணப்பட்டதைப்போன்று  20 ஹெக்டெயார் காணிகள்   சீன நிறுவனத்துக்கு சொந்தமாக வழங்கப்படமாட்டாது. 

இதேவேளை  கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம்   தாமதமாகியமைக்காக  குறித்த சீன நிறுவனத்துக்கு எவ்விதமான நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவேண்டியதில்லை.  அதற்கான மாற்று ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து திருத்தங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது  என்று   அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க  தெரிவித்தார். 

புதிய திருத்தங்களின் பிரகாரம் மாநகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சீன நிறுவனம் ஆகியன   முத்தரப்பு உடன்டிபக்கையில் கைச்சாத்திடவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இந்த விடயங்களை அறிவித்தார்.  

அதன்படி அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ள யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு 

கடந்த  2014 ஆம் ஆண்டு  சீன நிறுவனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட  கொழும்பு துறைமுக நகர்த்திட்டம்  தொடர்பான  உடன்படிக்கையில் திருத்தங்களை  செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது  தொடர்பில்   குறித்த நிறுவனத்துடன் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. 

குத்தகை மட்டுமே.. 

அந்தவகையில்  கடந்த அரசாங்கம் செய்துகொண்ட  உடன்படிக்கையின் பிரகாரம்   சீன நிறுவனத்துக்கு   20 ஹெக்டெயர் காணியை  சொந்தமாக வழங்குவது என்றும்    எஞ்சிய காணிகளை  99   வருட குத்தகைக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய திருத்தத்தின் பிரகாரம்   அனைத்து காணிகளும் 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும். சீன நிறுவனத்திற்கு எந்தவொரு காணியும் சொந்தமாக வழங்கப்படமட்டாது. 

திருத்தங்கள்  

அடுத்ததாக கடந்த அரசாங்கத்தின் உடன்டிக்கையின் பிரகாரம் இந்த திட்டத்தில் 62 ஹெக்டயார் காணி இலங்கை துறைமுக அதிகார சபை பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. எவ்வாறெனினும் இவ்வாறு நிரப்பப்படும் காணியின் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கொடுக்கப்பட வேண்டும். 

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டமூலத்தை திருத்துவது உள்ளிட்ட அரசாங்கத்தின் பொறுப்புகள் துறைமுகங்கள் அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு சீன நிறுவனத்துடன் முன்னைய அரசாங்கம் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு பதிலாக முத்தரப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவுள்ளோம். 

முத்தரப்பு உடன்படிக்கை  

அதாவது மாநகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சீன நிறுவனம் ஆகியன இந்த முத்தரப்பு உடன்டிபக்கையில் கைச்சாத்திடவுள்ளன. 

கொழும்பு மாவட்டத்துடன்

 இணைக்கப்படும்  

கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி நிரப்பப்படும் காணிகள் தொடர்பான தெ ளிவற்ற தன்மை காணப்படுகிறது. புதிய சட்டத்தின் கீழ் இப்பூமியானது, கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் பகுதியொன்றாக இணங்காட்டப்படுவதோடு, அது கொழும்பு மாநகர சபையிடமிருந்து பிரேரிக்கப்பட்ட நிதி கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. 

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு....  

புதிய ஒப்பந்தத்தின் கீழ் - நிரப்பப்படுகின்ற அனைத்து காணிகளும் ஜனாதிபதியினால் வர்த்தமானியில் பிரசுரித்து, அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கி கொடுக்கப்படும். இதன் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் இப்பூமியானது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும்.   

மீனவர்களின் வருமானத்துக்கு 

ஆதரவு வழங்கும் வேலைத்திட்டம்

புதிய ஒப்பந்தத்தின் கீழ் - மீனவ மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சினை விசாரித்து பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் மீனவர்களின் வருமானத்துக்கு ஆதரவு வழங்கும் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபா வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் சீன கம்பனியின் மூலம் ஒதுக்கப்படும்.

உட்கட்டமைப்பு வியூகம்

புதிய ஒப்பந்தத்தின் கீழ் - வேலைத்திட்ட பூமிப் பரப்பு வரையான அனைத்து பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு வீயூகம் வகுப்பது தொடர்பில்  அரசாங்கத்தின் பொறுப்பினை இலகுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக நீண்ட கால தீர்வொன்றாக வேலைத்திட்ட கம்பனியின் ஊடாக அரச – தனியார் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் தகுதியினை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

நிரப்பப்படுகின்ற பூமி 

அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு நிதியினை பயன்படுத்தும் போது அரசாங்கத்தின் பொறுப்பினை இலகுபடுத்துவதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சொத்துக்களை முகாமைத்துவ கம்பனியொன்றினை தாபித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் கவனம் செலுத்த புதிய ஒப்பந்தங்களின் கீழ் சீன  கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது. 

காணி அபிவிருத்திக்கு 

  கட்டுப்பாடுகள்

சுகாதார நலன்புரி மத்திய நிலையம் மற்றும் ஆரோக்கியசாலைகள், கண்காட்சி   மாநாட்டு நிலையங்கள் மற்றும் கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலையம் ஆகியவற்றை அவ்விடங்களில் அமைப்பதற்கு ஏதுவான முறையில் மேற்கூறப்படுகின்ற கட்டுப்பாடுகளினை விஸ்தரிப்பதற்கு புதிய ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

அதேபோன்று கொழும்பு துறைமுகத்தில் வடக்கு மற்றும் மேற்கு கப்பல் துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது. அதற்கும் மேலாக, ஆரம்பத்தில் நிரப்பப்படுகின்ற காணிகள் உட்பட புதிய கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலைய கட்டிடத்தை தாபிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இழப்பீட்டு கோரிக்கைகள்

தேவையான சூழலியல் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபையில் முன்னர் காணப்பட்ட நிர்வாகத்துக்கு முடியாது போனது. அதனால் வேலைத்திட்டத்தினை நிறுத்தியமையினால் ஏற்பட்ட நட்டத்தினை மீட்டுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இழப்பீட்டு கோரிக்கைகளை, ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரின் சீன விஜயங்களின் போது ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் விலக்கிக் கொள்வதற்கு சீனக் கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.

இழப்பீடுகளை குறைத்துக் கொள்வதற்காக நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற காணிகளின் அளவினை அதிகரித்தல் மற்றும் 62 ஹெக்டேயார் இலங்கை அரசாங்கத்தின் உரிமையினை குறைக்காமல், தமக்கு உரித்தான பெறுமானத்துக்கு மேலதிகமாக விற்பனை செய்வதற்கு முடியுமான 02 ஹெக்டேயார் நிலப்பரப்பினை பெற்றுத் தருமாறு வேலைத்திட்ட கம்பனியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இவை இரவு மோட்டார் வாகன போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படும் வீதிகள் போன்ற தேவையற்ற வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பூமிகளில் இருந்து வழங்கப்படும்.

துறைமுக நகரத்துக்காக மேலும் 28 ஹெக்டேயார் பூமி பரப்பினை இவ்வருடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட புதிய பாரிய திட்டத்தினுள் வழங்க வேலைத்திட்ட கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது. 

சுற்றுச்சூழல் அனுமதிகள்

வேலைத்திட்ட கம்பனிகள் மூலம் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளுடன், முழுமையான புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடொன்றினை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு பாரிய நகர மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதிய சுற்றுச்சூழல் நிபந்தனைகள் 

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சுற்றுச்சூழல் தடைகள் மதிப்பீட்டின் கீழ், கடற்கரை காப்புறுதி திணைக்களத்தின் மூலம் சுய அபிவிருத்தி பத்திரத்தில் 42 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும் நிரப்பப்படுகின்ற 269 ஹெக்டேயார் பூமி பரப்புப்புக்காக பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடாத்தப்பட்ட, 2015ஆம் ஆண்டில் பொது மக்கள் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பிரபல்யப்படுத்தப்பட்ட, புதிய சுற்றுச்சூழல் தடைகள் மதிப்பீட்டின் கீழ், சுற்றுச்சூழல் தடைகளினை குறைத்துக் கொள்வதற்காக 70 நிபந்தனைகள் கடற்கரை காப்புறுதி திணைக்களத்தின் புதிய அபிவிருத்தி பத்திரத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன.

நிலைமாற்றம்

சிங்கப்பூர் மற்றும் டுபாய் இடையிலான இடைவெளியை நிரப்பும் நோக்கில் நிதி நகரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக இப்பூமி பரப்பினை பயன்படுத்துவதாக சீன அரசுடன் இணக்கத்துக்கு வந்துள்ளோம். இதன் மூலம் கடற் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இதற்காக, டுபாயில் நடைமுறைப்படுத்தும் வகையில் கடற்கரை நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக தேவையான புதிய சட்ட திட்டங்கள் அரசாங்கத்தின் மூலம் முன்மொழியப்பட உள்ளன. இந்நிதி நகரம், இலங்கைக்காக பிரதான வருமான மார்க்கமாக மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  செய்தியாளர் மாநாட்டில்  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகையில், 

நாம் ஆட்சிக்கு வரும்போது துறைமுக நகர் திட்டமானது ஒரு குழப்பகரமானதாக காணப்பட்டது. அதாவது 20 ஹெக்டயார் காணியை சீனாவுக்கு கொடுப்பதற்கு முன்னர் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டது.   தமது விமானங்கள் இந்த நிலப்பரப்பின்  மேலாக பறக்க முடியாது போய்விடும் என்று இந்தியா  கருதியது. இதனால் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. 

இது ஒரு புதிய பூமி பரப்பாகும். இந்நிலையில் இந்த காணியானது யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுகின்றது. அதனால்தான் எமது அரசாங்கம் இந்த காணி பரப்பை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் கொண்டுவருவதற்கு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இல்லாவிடில் இந்த காணிப்பரப்பில் கசினோ மற்றும் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றால் நாம் எவ்வாறு தடுப்பது. கடும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை வந்திருக்கும். 

எனவே தற்போது அனைத்தையும் சரி செய்து புதிய உடன்படிக்கை கொண்டுவரப்படவுள்ளது. அதுமட்டுமன்றி இந்த இடத்தை தனியொரு சட்டத்தின் மூலம் இப் பிராந்தியத்தின் நிதிக் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி இதனை நிரப்புவதற்கு உள்நாட்டிலிருந்தே கற்களும் மண்களும் பெறப்படவுள்ளன. இதனால் சுற்றாடல் பாதிப்பு ஏற்படாதா 

பதில் அது குறித்து ஆராயப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32