வைத்தியசாலைகளுக்கு 114 சிகிச்சை படுக்கைகளை வழங்கவுள்ள ரோட்டரி கிளப்..!

Published By: J.G.Stephan

22 Dec, 2020 | 06:00 PM
image

(செ.தேன்மொழி)
சுகாதார துறையின் வளர்ச்சிக்காக ரோட்டரி கிளப்பினால் வழங்கப்படும் உதவிகளை வரவேற்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் தடுப்பு மற்றும் கொவிட் தொற்றை தடுப்பதற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை  இலங்கை ரோட்டரி கிளப் மற்றும் அவுஸ்திரேலியா ப்லேமின்டன் ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கலந்துலையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்நாட்டு வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப்பிரிவுகளுக்காக 80 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சிகிச்சை படுக்கைகளை வழங்குவது தொடர்பில்  ரோட்டரி கிளப் கருத்து தெரிவித்துள்ளது. அதற்கமைய 114 சிகிச்சை படுக்கைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையை முன்னேற்றுவது சுகாதார அமைச்சின் பொறுப்பாக இருந்தாலும் நாட்டு மக்களினதும் சுயாதீன அமைப்புகளினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும். வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சை பிரிவுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தருணத்தில் ரோட்டரி கிளப்பினால் வழங்கப்பட்ட உதவிகளை வரவேற்பதுடன், கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் காலத்தில் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்கு சுகாதார துறையை முன்னேற்ற வேண்டும்.

இந்த செயற்பாடுகளுக்கு இலங்கையின் ரோட்டரி கிளப் மற்றும் அவுஸ்ரேலிய ரோட்டரி கிளப்பினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை வரவேற்பதுடன், இதற்கு முன்னர் போலியோ தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்காக ரோட்டரி கிளப்பினால்  வழங்கப்பட்ட உதவிகளையும் இராஜாங்க அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50