நாகோர்னோ-கராபாக் பகுதியில் 248 ஹெக்டேர் நிலப்பரப்பை துப்புரவு செய்துள்ள ரஷ்யா

Published By: Vishnu

22 Dec, 2020 | 11:41 AM
image

ரஷ்ய அமைதி காக்கும் படையின் பொறியியல் பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத நாகோர்னோ-கராபாக் பகுதிகளில் மேலும் 10 ஹெக்டேர் (சுமார் 25 ஏக்கர்) நிலப்பரப்பை பாதுகாப்புக் காரணங்களுக்காக துப்புரவு செய்துள்ளதாக ரஷ்யா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, நாகோர்னோ-கராபாக் பிராந்தியில் மொத்தமாக சுமார் 248 ஹெக்டேர் நிலப்பரப்பு, 95.3 கிலோமீட்டர் சாலைகள், 423 வீடுகள் என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 8,300 க்கும் மேற்பட்ட வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டும் உள்ளது.

இந்த துப்புரவு பணிகளின் காரணமாக கடந்த நாட்களில் 350 க்கம் மேற்பட்ட அகதிகள் அங்கீகரிக்கப்படாத நாகோர்னோ-கராபாக்கிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அது மாத்திரமன்றி கராபக்கில் 43,000 க்கும் மேற்பட்ட அகதிகள் ஏற்கனவே நிரந்தர வதிவிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நாகோர்னோ-கராபக்கில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜானுக்கிடையில் மீண்டும் விரோதங்கள் தொடங்கின.

இது நீண்டகால மோதலின் தொடர்ச்சியாக மாறியது மற்றும் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தரப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் நவம்பர் 10 ஆம் திகதி வரை ஒரே இரவில் முத்தரப்பு ஒப்பந்தம் மட்டுமே வெற்றிகரமாக மாறியது.

மொஸ்கோவின் மத்தியஸ்தத்துடன், அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகியவை தீயை முற்றிலுமாக நிறுத்தி, கைதிகளையும் இறந்தவர்களின் உடல்களையும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதுடன், நாகோர்னோ-கராபாக் பிராந்தியில் அமைதி காக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17