அம்பாறை - சம்மாந்துறை நிந்தவூர் பகுதியில்  உள்ள வயல் ஒன்றின் வாய்க்கால் பகுதியிலிருந்து இன்று (02) நபரொருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்  நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த எல்.அஷ்ரப் (42) என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.