கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை,  கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த    பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.