போக்குவரத்து விதிகளை மீறயமை தொடர்பில் 1845 வழக்குகள் -  அஜித் ரோஹண

Published By: Digital Desk 4

21 Dec, 2020 | 10:16 PM
image

(செ.தேன்மொழி)

மோட்டார் வாகனங்கள்  தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் 1845 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மோட்டார் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 9000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை ஐந்து மணிவரை முன்னெடுக்கப்பட இந்த சுற்றிவளைப்பின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 113 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 113 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது 73 மோட்டார் சைக்கிள்களும், 26 முச்சக்கர வண்டிகளும்,  5 லொறிகளும் மற்றும் பஸ் உட்பட பல்வேறு வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது மோட்டார்வாகன போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் 1845 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் போது நாடளாவிய ரீதியில் 60 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துகளின் போது 20 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்களிடம் அபராதம் அறவிடும் நோக்கத்திலோ அல்லது அவர்களை கைது செய்யும் நோக்கத்திலோ இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. வீதி விபத்துகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரையிலும் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16