பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை தனதாக்கிய நியூஸிலாந்து

Published By: Vishnu

21 Dec, 2020 | 11:51 AM
image

ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு : 20 போட்டியில் வெற்றி பெற்று, நியூஸிலாந்து அணி தொடரை தனதாக்கியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக இடம்பெறும் இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் 2 ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இந்த நெருக்கடிக்கு மத்தியில் நடுத்த வரிசையில் களம் கண்ட மொஹமட் ஹபீஸ், தனிநபராக நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். 

அதனால் 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஓட்டத்தை பதிவு செய்த 40 வயதான மொஹமட் ஹபீஸ் 99 ஓட்டங்களுடன் (57 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

164 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி நியூஸிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்டீல் 21 ஓட்டங்களில் ஹரிஸ் ரவூப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அதனால் நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் 35 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக விக்கெட் காப்பாளர் டிம் செய்பெர்ட்டும், அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 4 ஓட்டம் தேவைப்பட்ட போது, வில்லியம்சன் பவுண்டரியுடன் முடித்து வைத்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 164 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செய்பெர்ட் 63 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களுடனும், வில்லியம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட  இருபதுக்கு : 20 தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு : 20 போட்டி நாளை நேப்பியரில் ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58