தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,652 பேர் இதுவரையில் கைது 

Published By: Digital Desk 3

21 Dec, 2020 | 11:15 AM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1,652 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு வடக்கு மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும்,நாடளாவிய ரீதியில் பல கிராமசேவகர் பிரிவுகள் மற்றும் சில வீதி ஒழுங்குகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமன்றி நாடுபூராகவும் உள்ள அனைவருமே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் முக்கிய விடயமாக காணப்படும் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று (20.12.2020) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் கிடைக்கப்பெற்று வருவதால் அனைவரும் அந்த ஒழுங்குவிதிகளை பின்பற்றவேண்டும்.

தற்போது பண்டிகை காலம் என்பதினால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது மட்டுமல்ல , தங்களது பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை வீதி விபத்துகளுக்கு இலக்காகாத வகையிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22