பொதுப்போக்குவரத்து கண்காணிப்பில் சிவில் உடையில் பொலிஸார் - அஜித்ரோஹண

Published By: Digital Desk 3

21 Dec, 2020 | 10:59 AM
image

(செ. தேன்மொழி)

பொது போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பிற்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்றன. நாட்டில் டிசம்பர் 20 முதல் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதேபோன்று ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி மற்றும் 20 ஆம் திகதிகளிலும் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

பண்டிகைக்காலம் என்ற போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதனால்  வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வீதி விபத்துகளை குறைப்பதற்காகவும், தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள், அதிக வேகமாகவும், வீதி சமிஞ்சைகளுக்கு புறம்பாகவும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் , தொலைபேசியில் உரையாடிக் கொண்டும், கவனமின்றியும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். வீதி விபத்துகளையும்,கொவிட்-19 வைரஸ் பரவலையும் தடுக்கும் வகையிலுமே இந்த விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18