பிரிட்டனுக்கான விமான சேவைகளை நிறுத்திய பல ஐரோப்பிய நாடுகள்

Published By: Vishnu

21 Dec, 2020 | 05:03 PM
image

புதிய வகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளன.

அதன்படி பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இங்கிலாந்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

ஏனைய ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை தடைசெய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை ஆர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை இடை நிறுத்த முடிவுசெய்துள்ளதாக தென் அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.

அர்ஜென்டினாவின் உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில், விமான சேவை இடைநீக்கம் தொடங்குவதற்கு முன்பு பிரிட்டனில் இருந்து இறுதி விமானம் திங்கள்கிழமை காலை ப்யூனோஸ் அயர்ஸுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் வரும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கனடா பிரிட்டனில் இருந்து வருபவர்களின் நுழைவை இடைநிறுத்த தீர்மானம் மேற்கொண்டதாக கூறியிருந்தது.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பு காரணமாக லண்டன் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி பிரிட்டனில் இதுவரை 2,046,161 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 67,503 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17