நாட்டில் தனிமைப்படுத்தல், விடுவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பு

Published By: Digital Desk 4

20 Dec, 2020 | 09:11 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தினமும் 500 – 600 க்கு இடைப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று பதிவான தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை 262 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 232 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும் , 30 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 36 929 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 33 260 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர். இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 28 267 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8491 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்துருவ பிரதேசத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

இந்துருவ பிரதேசத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. துந்துவ மேற்கு மற்றும் துந்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பெந்தரப் பிரதேசத்தில் தொற்றுக்கு இலக்கான 41 பேர் இனங்காணப்பட்டரதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

கொழும்பில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

முகத்துவாரம் , கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, வெல்லவீதி, வாழைத்தோட்டம், மானிகாவத்தை, தெமட்டகொட, மருதானை, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம சேகவர் பிரிவு , பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவில் ஃபோர்கஸ்வீதி தெற்கு, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவில் ஹூணுபிட்டி கிராம சேவகர் பிரிவு, குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் 60 ஆவது தோட்டம், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் நசீர்வத்தை, மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்தை ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹாவில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலபிட்டி கிராம சேவகர் பிரிவில் நைதுவ பிரதேசம் , பேலியகொட பொலிஸ் பிரிவில் கஹபட கிராம சேவகர் பிரிவு, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹாவில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

வத்தள பொலிஸ் பிரிவில் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவில் துவேவத்த பிரதேசம் , பேலியகொட பொலிஸ் பிரிவில் பேலியகொடவத்த, மீகஹாவத்தை கிராம சேவகர் பிரிவுகள் , பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவில் றோஹண விகாரை மாவத்தை , கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஹூணுபிட்டி கிராம சேவகர் பிரிவில் வெதிகந்த பிரதேசம் , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தல்துவ கிராம சேவகர் பிரிவில் எம்.சி. வீட்டுத்திட்டம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் நிஹாரி வடக்கு,  கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் வாரண விகாரை வீதி , கத்தொட்ட வீதி , ஹித்ரா மாவத்தைக்கு உட்பட்ட பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வேயங்கொட பொலிஸ் பிரிவில் ஹிரிபிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவில் சுதந்திர வீதி , பூகொட பொலிஸ் பிரிவில் குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவு என்பனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹாவில் நாளை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொடை கலபட கிராம சேவகர் பிரிவில் நெல்லகஹாவத்தை மற்றும் பூரண கொட்டுவத்தை , கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை என்பன நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன.

ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

காலி கல்வி வலய பாடசாலைகள் தொடர்ந்தும் மூடல்

கொவிட் எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். காலி மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சனியன்று பதிவான மரணங்கள்

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதையடுத்து மார்பு நோய்த்தொற்றுக்கு உள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொவிட் 19 தொடர்பான நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொடர்புபட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான பெண்ணொருவர் கடந்த 18 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் -19 தொற்றால் ஏற்பட்ட மார்பு தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் கடந்த 18 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட மார்பு தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33