இனங்களின் சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ‘தேசிய இனங்களின் சபை’ அவசியம்

Published By: J.G.Stephan

20 Dec, 2020 | 06:43 PM
image

புதிய அரசியலமைப்பில் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை அமைக்கப்பட வேண்டும் என்று சமத்தவக் கட்சி தனது முன்மொழிவில் சுட்டிக்காட்டியுள்ளது. 

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணத்துவக்குழுவிற்கு சமத்துவக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.சந்திரகுமார் அனுப்பி வைத்துள்ள முன்மொழிவிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, 

உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பானது, இலங்கை பல்லின இனங்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் பன்மைத்துவத்தைப் பேணும் வகையிலான பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும். மொழி, சமயம், மானுடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய சமூகங்களாக அவை உறுதி செய்யப்பட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்கணைப் பேணும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. 

மேலும், புதிய அரசியல் அமைப்பானது இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப் பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும் நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பேணும் வகையிலும் அமைய வேண்டும். இன, மத, மொழி, பிரதேசம் என்ற பேதங்களில்லாத ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். 

மதம், மொழி, பிரதேசம், பால் சார்பின்மைக்கு இடமளிக்காத வகையில் சமத்துவமும் சமூக நீதியும் பேணப்படுதல் அவசியம். இலங்கையில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாக விடயங்களை ஆற்றக் கூடிய பொறிமுறைக்கு இடமளிக்கப்படுதல் அவசியம். தொகுதி வாரியான பிரதிநிதித்துவத்துக்கு மேலதிகமாக எண்ணிக்கைச் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதித்தும் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவக் கட்டமைப்பும் அதற்கான ஒதுக்கீட்டுக்கும் இடமளிக்கப்படல் வேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவக்கான பால்நிலைச் சமத்துவத்துக்கும் பங்கேற்புக்கும் இடமளிக்கும் வகையில் அவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளுராட்சி சபைகளில் மூன்றில் ஒன்றாகவும் மாகாணசபைகளில் நான்கில் ஒன்றுக்கு அதிகமாகவும் பாராளுமன்றத்தில் ஐந்தில் ஒன்றுக்குக் கூடுதலாகவும் ஒதுக்கீடு உறுதி செய்யப்படுதல் வேண்டும். 

மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு அவை நடைமுறைக்குரிய பொறிமுறையில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அரசியலமைப்பின் கூறப்படும் விடயங்கள் அனைத்தும் தெளிவான பொருள்கோடலில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் சமனிலையில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும். 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சபையில் மக்கள் நலனின் அடிப்படையில் மக்கள் நலன், தேச நலன் ஆகியவற்றுக்கமைய சட்டவாக்கமும் சட்டத்திருத்தங்களும் செய்யப்படுதல் வேண்டும். சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்ற அடிப்படையில் எந்த வகையான முன்னுரிமை அளித்தல்களும் தவிர்க்கப்பட்டு, பாரபட்சமின்மை பேணப்படுதல் வேண்டும். 

அரசியலமைப்பில் கிடைக்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகை செய்தல் அவசியம். ஆட்சிக் கட்டமைப்புக்கான பிரதிநிதிகளை மக்கள் சுயாதீனமான முறையில் தெரிவு செய்வதற்கான உத்தரவாதமுடைய தேர்தல்கள் உரிய கால ஒழுங்கில் நடத்தப்படுவது கட்டாயம். 

ஜனாதிபதியை மக்கள் தேர்தல் மூலமாகத் தெரிவு செய்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் விகிதார முறைப்படி நடத்தப்படுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11