உடுவே தம்மாலோக தேரருக்கெதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல இன்று (02) பிறப்பித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பில் தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.