கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவின் விளக்கமறியல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் பியசேன கடந்த வாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

இதேவேளை குறித்த அரச வாகனம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.