மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா?: இறுதி தீர்மானம் நாளை..!

Published By: J.G.Stephan

20 Dec, 2020 | 12:15 PM
image

(எம்.மனோசித்ரா)
மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் குறித்த இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பார்  என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , 

கொரானா தொற்று ஒழிப்புடன், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்களுடன் அவர்களின் பகுதிகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. 

அதற்கமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுவதா, இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சரினால் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் தரம் 06  தொடக்கம்  13 வரையான வகுப்புகளுக்குரிய கற்றல் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளிலுள்ள சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46