ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது - கோலி உருக்கம்

Published By: Vishnu

20 Dec, 2020 | 11:27 AM
image

இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணித் தலைவர் விராட் கோலி,

வேதனையான இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். 60 ஓட்டங்கள் முன்னிலையுடன் வந்து நிலைகுலைந்து போய்விட்டோம். 

முதல் இரு நாட்களில் மேற்கொண்ட கடினமான முயற்சியால் வலுவான நிலையில் இருந்தோம். நேற்றைய தினம் ஒரு மணி நேரத்தில் எங்களால் வெற்றியே பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். சுதாரிப்பதற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. 

நாங்கள் இன்னும் தீவிரத்தன்மையுடன் துடுப்பாட்டம் செய்திருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் எப்படி பந்து வீசினார்களோ அதே போல் தான் இந்த இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு இருந்தது. 

ஆனால் இன்று (நேற்று) அவசரமாக ரன் சேர்க்கும் மனநிலையில் இருந்ததாக நினைக்கிறேன். ஓட்டம் எடுக்க இருந்த சிரமம்,அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விட்டது. 

எங்களின் உத்வேகம் குறைந்ததும், அவர்கள் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீசியதும் எங்களது வீழ்ச்சிக்கு காரணமாகும். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட எங்களது மோசமான பேட்டிங் இருக்க முடியாது. 

எனவே இங்கிருந்து இனி முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். வீரர்கள் தங்களது உண்மையான திறமையை உணர்ந்து அதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். 

களத்தடுப்பு சில பிடியெடுப்புகளை நழுவ விட்டதும் பின்னடைவாக அமைந்தது. இல்லாவிட்டால் முதல் இன்னிங்சில் 100 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருப்போம். 

இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் எங்கள் வீரர்கள் வலுவாக மீண்டெழுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட்டில் நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது.

குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35