2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அமைச்சரவைக்கு பணிப்புரைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். 

ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் குழுவின் செயலாளராக உள்ளூராட்சி மன்றங்கள் மற்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.