ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு; ஒரு கடைக்கு எதிராக வழக்கு தாக்கல்

Published By: Vishnu

20 Dec, 2020 | 09:08 AM
image

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த கடைகள் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

எனினும் கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் இன்று முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார் எனினும் குறித்த வங்கியில் முறையாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சீ.சீ.டீ.வீ கமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34