இணையத்தில் வெளியான டொனால்ட் டிரம்பின் மனைவியின் நிர்வாணப்படங்கள்

Published By: Raam

02 Aug, 2016 | 12:38 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் மனைவி மெலினியாவின் நிர்வாணப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அவரது மனைவி மெலினியா டிரம்ப் தற்போது பிரசார களத்தில் குதித்துள்ளார்.

யுகோஸ்லோவேக்கியா நாட்டில் 1970 ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெலினியா(46)  மொடலிங் துறைக்குள் நுழைந்து உள்நாட்டில் பிரபலமானார்.

பின்னர், மிலன் மற்றும் பாரிஸ் நகரங்களில் மொடல் அழகியாக வலம் வந்த அவர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1996 ஆம் ஆண்டு குடியேறினார். 1988 ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் நடந்த ஒருபார்ட்டியில் டொனால்ட் டிரம்பை சந்தித்த மெலினியா, அவரை காதலித்து, மூன்றாவது மனைவியானார்.

இந்நிலையில், அவர் மொடலிங் தொழிலில் கொடிகட்டி பறந்தபோது 1990 ஆம் ஆண்டு பகுதியில் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முழு நிர்வாண கோலத்தில் அவரது பல்வேறு புகைப்படங்களையும், இன்னொரு பெண்ணுடன் கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி நியூயோர்க் போஸ்ட்டில்’ வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியீடப்பட்டுள்ள புகைப்படங்கள் நின்றுபோன பழைய பத்திரிகைக்காக அவர் போஸ் கொடுத்தவை மேலும், இந்தப் புகைப்படங்கள் தனக்கு மெலினியா அறிமுகம் ஆவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னர் வெகு வெற்றிகரமான மொடலிங்கில் திகழ்ந்த மெலினியா, இதுபோல் ஏராளமான பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்திருந்தது எனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52