தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து நபரை அழைத்துச் சென்ற பேரூந்து சாரதி, நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 3

19 Dec, 2020 | 02:11 PM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட நபரை அழைத்துச் சென்ற பேரூந்தின் உரிமையாளர் மற்றும் அதன் சாரதிக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பொரளை பொலிஸ் நிலையத்துக்கு நேற்று  வெள்ளிக்கிழமை 119 என்ற அவசர அழைப்பு பிரிவின் ஊடாக ,பொரளை அதிவேக வீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக பேரூந்து ஒன்று பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிவேக வீதியில் கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய மாத்தளைக்கு வெளியேறும் பகுதியில் வைத்து குறித்த பேரூந்து நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த பேரூந்தை பொலிஸார் சோதனைச்  செய்தனர். இதன்போது 51 பேர் அதில் பயணித்துள்ளனர். இந்த பேரூந்தில் பொரளை - வணாத்துமுல்ல  தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருந்தும் ஒருவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை பொரளை பர்குசன் வீதியைச் சேர்ந்த சிலரும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் ஒருவரை அழைத்து சென்றதன் காரணமாக அந்த பேரூந்தில் பயணித்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் போது குறித்த பேரூந்தை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அதில் பயணித்த அனைவரும் பொரளை பகுதியில் காணப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பேரூந்தின் சாரதி அதன் உரிமையாளர் மற்றும் அதில் தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து பயணித்துள்ளதாக கூறப்படும் நபருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07