மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   

குறித்த கிணறு தோண்டப்பட்டபோதே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் 96 மனித எச்சங்கள் குறித்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. 

குறித்த கிணறு மன்னார் நீதிவான் முன்னிலையில் இன்றும் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.