எம்.சி.சி. ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விடுபட்டமை சிறந்தது - கம்மன்பில

Published By: Gayathri

19 Dec, 2020 | 02:10 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விடுபட்டமை சிறந்த  செயற்பாடாகும். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தத்தில் அரசாங்கம் எப்போதும் கைச்சாத்திடாது எனத் தெரிவித்த சக்திவலுத்துறை அமைச்சர் உதயகம்மன்பில, வெளிவிவகார கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் பொதுத்தன்மையுடன் செயற்படும் என்றும் கூறினார்.

பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எம்.சி.சி ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பரிசு பொதி என்றே குறிப்பிட வேண்டும். எனினும் தற்போது அந்த பாரிய பாதிப்பில் இருந்து மீண்டுள்ளோம். 

எம்.சி.சி ஒப்பந்தத்தில் 480 மில்லியன் அபிவிருத்தி நிதி வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் நாட்டுக்கு எதிரான பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை எம்.சி.சி. ஒப்பந்த மீளாய்வு குழு  சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் இரகசியமான முறையில் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட முயற்சித்தது. எதிர்கட்சியில் இருந்துக் கொண்டு  அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடித்தோம். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தத்தால் இலங்கைக்கு நிதி வழங்க  மறுக்கப்பட்டுள்ளதால் எவ்வித பாதிப்பும் வெளிவிவகார கொள்கையில் ஏற்படாது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளிவிவகார கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும்  பொதுத்தன்மையுடன் செயற்படும். எந்த நாட்டுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18