எவருடைய அழுத்தத்தினால் இந்திய நிறுவனத்திற்கு வழங்கினீர்கள் ? - முஜிபுர் கேள்வி

Published By: Gayathri

19 Dec, 2020 | 02:09 PM
image

(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கூட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக தனியார் நிறுவனத்துடன் நாம் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது, அதனை விற்றதாகக் குற்றஞ்சாட்டிய ஆளுந்தரப்பினர், தற்போது யாருடைய அழுத்தத்தினால் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கினார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டோம் என்று அரசாங்கம் உறுதி வழங்கியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் சர்வதேசத்திற்கு விற்க முற்படுவதாகக் கூறினர். 

எமது ஆட்சி காலத்தில் கூட்டு வர்த்தக முயற்சியாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இதனையே தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் செய்திருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றி ஒரு வருடம் நிறைவடைவதற்குள் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது முதலீட்டாலர்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். 

முதலீட்டின் மூலம், கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்குவதற்கான முயற்சியா என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் உண்மை தன்மையை எதிர்வரும் சில நாட்களில் எம்மால் வெளிக்கொண்டு வர முடியும்.

எமது ஆட்சி காலத்தில் கூட்டு வர்த்தக நடவடிக்கையாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

எனினும் அந்த கூட்டு வர்த்தக நடவடிக்கையை அப்போதைய எதிர்க்கட்சியாகக் காணப்பட்ட தற்போதைய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் விற்றதாகவே விளங்கிக் கொண்டனர்.

ஆனால், தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளமையை அவர்கள் கூட்டு வர்த்தக நடவடிக்கை என்றே கூறுகின்றனர். 

இவ்வாறு கூட்டு வர்த்தக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. தேசிய முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமையளிப்பதாகக் கூறிய அரசாங்கத்திற்கு உள்நாட்டில் முதலீட்டாளர்களை தேடிக்கொள்ள முடியவில்லையா?

இது தொடர்பில் பிரதமர் ஒரு கருத்தையும், அமைச்சரவை அமைச்சர்கள் அதற்கு முரணான கருத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். 

இதன் மூலம் அரசாங்கத்தினுள் காணப்படும் முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன. எனவே தற்போது அரசாங்கம் நூல் அருந்த பட்டம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது. யாரும் பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்வரவில்லை. 

தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்கோ அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ யாரும் முன்வரவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37