ஹொலிவூட் படத்தில் தனுஷ்

Published By: Digital Desk 3

19 Dec, 2020 | 11:20 AM
image

'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா' படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கிறது.

The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹொலிவூ நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷ் மட்டுமே ஒரே இந்திய நடிகராக இருப்பார்.

இதில் தனுஷ் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

இப்படத்தில் நடிப்பதைப் பற்றி தனுஷ், “நெட்பிளிக்ஸி-ன் தி கிரே மேன் படத்தில், ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைவது மிகுந்த உற்சாகமாக உள்ளது. அற்புதமான ஆக்ஷன் நிறைந்த அனுபவத்தைப் பெற இப்படத்தில் பங்கு பெற மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள என்னுடைய என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. இத்தனை காலமாக என் மீது நீங்கள் செலுத்தும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் 2018 இல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹொலிவூட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹொலிவூட் திரைப்படமாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35