ஜனாஸா எரிப்பு விவகாரம் : நாடளாவிய ரீதியில் தொடரும் எதிர்ப்புகள் ; மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவும் தாக்கல்

Published By: Digital Desk 3

19 Dec, 2020 | 10:11 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு உடனடியாக தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி இந்த ரிட் மனு சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

தலையில் காயத்திற்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த தனது தந்தையை, கொவிட் 19 இனால் மரணித்ததாக கூறி பலவந்தமாக எரித்தமைக்கு எதிராக மகன் ஒருவர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ளார்.  தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த எம்.ஆர்.எம். நிபால் என்பவரே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால்   சஞ்ஜீவ முனசிங்க , சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, பொலிஸ் மா அதிபர்  சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமது வீட்டில் எவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் தந்தைக்கு மாத்திரம் கொவிட் இருப்பதாக கூறி ஜனாஸாவை தகனம் செய்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ரிட் மனு எதிர்வரும் 2021 ஜனவரி 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் விடயங்களை முன்வைக்க பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே முஸ்லிம்களைவிட, கத்தோலிக்க , அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் போதகர்களாலும் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்யும் கட்டாய நடவடிக்கைக்கு எதிராக  அமைதியான முறையில் கவனயீர்ப்பு  போராட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உடல்களை எரிக்கும் செயற்பாட்டிற்கு இவர்கள் பொரளை மயானத்தில் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் கண்டித்து  நாடளாவிய ரீதியில் பல இடங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்புகள் முன்வைக்கப்ப்ட்டு வருகின்றன. பல இடங்களில் இது தொடர்பில் வெள்ளைத் துணி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12