யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மேலும்  மூவருக்கு கொரோனா

Published By: Digital Desk 4

18 Dec, 2020 | 09:19 PM
image

( எம்.நியூட்டன் )

யாழ் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை  இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள்  உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் கடந்த புதன்கிழமை  பெறப்பட்டு கட்டுநாநக்க  ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைப்பட்டன.

அதில்  39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை இன்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35