ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.