இலங்கை - பாகிஸ்தானுக்கிடையில் 6 ஆவது சுற்று அரசியல் மட்ட பேச்சு

Published By: Digital Desk 3

18 Dec, 2020 | 12:35 PM
image

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வெளியுறவு செயலாளர் மட்ட இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் (BPC) 6 ஆவது சுற்று நேற்று முன்தினம் (16.12.2020) இணையவழியில் நடைபெற்றது.

வெளியுறவு செயலாளர் சோஹைல் மஹ்மூத் பாகிஸ்தான் தரப்புக்கு தலைமை தாங்கியதோடு இலங்கை தரப்பு சார்பாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

இதன் போது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகள் மற்றும் மக்கள் தொடர்பு பரிமாற்றல்கள் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, பாகிஸ்தானும் இலங்கையும் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நல்லுறவை பேணிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு செயலாளர் சோஹைல் மஹ்மூத் இருதரப்பு அரசியல் உறவுகளின் தரத்தையும், தலைமை மட்டத்தில் நல்லுறவையும் சுட்டிக் காட்டினார்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் சிறந்த அரசியல் உறவுகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவதற்கும் அதற்கான புதிய வழிமுறைகளை ஆராய்வதற்கும் இருதரப்பும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

மேலும், உலக அளவில் கொவிட்-19 இன் தாக்கத்தையும், அது மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தி உள்ள  விளைவுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்  என்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் இம்ரான் கானின், அபிவிருத்தியடைந்தது வரும் நாடுகளுக்கான ‘கடன் நிவாரணம் குறித்த உலகளாவிய முன்முயற்சி’ குறித்து இலங்கை பிரதிநிதிகளுக்கு வெளியுறவு செயலாளர் விளக்கமளித்தார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிலைமை, சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் முன்னேற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளுக்கு பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கப்படுத்தினார்.

மேலும் , "சார்க்" அமைப்பு மீதான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை அவர் தெரியப்படுத்தியதோடு ,பிராந்திய ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்  என்ற நம்பிக்கையையும்  வெளிப்படுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31