இலங்கையில் மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடும் - எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 4

18 Dec, 2020 | 07:12 AM
image

(எம்.மனோசித்ரா)

சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களுள்ளன.

இவ்வாறான  பிரதேசங்கள் ஊடாக மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடும். எனவே இவை தொடர்பில் உரிய தீர்மானங்கள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் மக்கள் பொறுப்பற்று செயற்படுவார்களாயின் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மரணங்களில் குறிப்பிடத்தக்களவானவை கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன.

அதிக சனத்தொகையை கொண்ட பிரதேசங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களுள்ளன. பண்டாரகம, புளத்சிங்களவில் சில கிராமங்கள் , மொனராகலையில் அலுபத, கண்டி மாவட்டத்தில் சில கிராமங்கள் உள்ளிட்டவை இவ்வாறானவையாகும்.

இந்த பிரதேசங்கள் ஊடாக மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே நகர சபையை அண்மித்த பகுதிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதோடு , நகரசபைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான புதிய அலையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 31 000 ஐ எட்டியுள்ளது. பாணந்துரை பிரதேசத்தை தனிமைப்படுத்துவதாக அறிவித்தவுடனேயே அங்குள்ள மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இது சிறந்த நிலைமையல்ல.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார அமைச்சு இவ்விடயத்தில் தலையிட வேண்டும்.

மக்களிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை நாம் எதிர்பார்க்கவில்லை. மக்கள் முறையாக செயற்படாவிட்டால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02