ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் நன்றியுடன் இருக்க வேண்டும் - தயாசிறி 

Published By: Digital Desk 4

17 Dec, 2020 | 09:54 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இணைத்துக்கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அவர்களை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது பாரிய ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கம் நன்றியுடன் இருக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை அமைக்க பாடுபட்ட கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இன்னும் அதிக சக்தியை வழங்கவேண்டும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். அவர்களை தள்ளிவைக்கவேண்டாம். அதனால் அவர்கள் வேறு திசைக்கு தள்ளப்படுவார்கள்.

இதுதொடர்பாக பல தடவைகள் அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பனர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கையால் அவர்கள் விரக்தியுற்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின்போது இவர்கள்தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். 

இவர்களை ஒதுக்கிவைத்து அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெறும் பெயர்பலகையாக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

அத்துடன் கட்சியின் எதிர்காலம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாட பலதடவைகள் கேட்டிருந்தோம். இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பசில் ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடி இருந்தோம். என்றாலும் அதுதொடர்பான எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. 

அந்த பிரச்சினைகள் அப்படியே இன்னும் இருக்கின்றன. குறைந்தபட்சம் கிராமங்களில் மின் தூண்களில் மின் குமிழ் பாெருத்த, வீதி அமைக்க எமது பிரதேசசபை உறுப்பினர்களுக்கு தேவையான சக்தியை வழங்காவிட்டால், நாங்கள் எவ்வாறு அவர்களுக்கு பதிலளிப்பது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நாங்கள் செய்வதறியாது இருக்கின்றோம். 

மேலும் கிராமங்களுக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் எமது பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒருசதமேனும் கிடைக்கவில்லை. அதனால் எமது உறுப்பினர்களை ஒதுக்கிவிட்டு அரசாங்கம் இதனை செய்வதாக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழித்துவிடும் திட்டமே இதனுல் இருக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38