போலித் தகவல்களை வழங்கினால் 5 வருடம் சிறை: அஜித் ரோஹண எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

17 Dec, 2020 | 05:06 PM
image

(செ.தேன்மொழி)


அரச அதிகாரிகளிடம் போலி தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதுடன் , அவர்களை ஐந்து வருடங்கள் வரை சிறைவைக்கவும் முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளும், நாடளாவிய ரீதியில் சில கிராமசேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை எந்தளவு முறையாக கடைப்பிடிக்கின்றார்களோ, அதற்கமையவே அந்த பகுதிகளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

புதுவருட பிறப்பு இடம்பெறவுள்ள போதிலும், கடந்த வருடங்களைப் போன்று இம்முறை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

அதனால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதென்றால் எமது கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது. இதேவேளை சுகாதார பிரிவினர்  ஏதாவது வேண்டுகோள் விடுத்தால் அதற்கமைய செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும்.

வைத்தியசாலையில், பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்காக செல்லும் போது அரச அதிகாரிகள் உங்களது விபரங்களை கேட்பார்களாயின், அவர்களுக்கு உண்மையான விபரங்களையே தெரிவியுங்கள்.

சிலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரச அதிகாரி ஒருவரிடம் போலியான பெயரை அல்லது முகவரியை தெரிவிப்பது குற்றச் செயற்பாடாகும்.

அதற்கமைய போலி பெயரை தெரிவித்தால் அது இன்னுமொரு நபரைப் போன்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்டமை என்ற குற்றச்சாட்டின் கீழும், ஏதாவது ஆவணம் தயாரிக்கும் போதும் போலியான தகவல்களை வழங்கினால் போலி ஆவணங்களை தயாரித்தமை என்ற குற்றச்சாட்டின் கீழும் அவர்கள் குற்றவாளியாகின்றனர்.

இந்நிலையில் இத்தகைய நபர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்வைத்து தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யமுடியும். அதற்கமைய இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை ஐந்து வருடம் வரை சிறைவைக்கவும் முடியும்.

இதேவேளை வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம்  கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகளாகும்.

இந்நிலையில் இந்த ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த  ஒக்டோபர்  மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டின் எந்த பகுதியில்  வசித்து வந்தாலும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41