தீவகத்தில் இடம்பெறும் பசு கொலைகளை தடுத்து நிறுத்துமாறு மக்கள் விசனம்..!

Published By: J.G.Stephan

17 Dec, 2020 | 03:54 PM
image

நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம்தெரியாத நபர்கள் கடத்தி படுகொலை செய்து இறைச்சியாக்கியுள்ளனர். 

வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர். 

குறித்த பசுமாடு 20 நாட்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் அது  தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். 


முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

மேலும், தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். 

அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில் மண்டை தீவு சந்தியில் இராணுவம், பொலிஸாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் தீவகத்தில் தொடர்ந்து பசுமாடுகள் உள்பட மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02