பாடசாலை நூலகங்களுக்கு விரைவில் பொருத்தமான நூல்கள் - கல்வி அமைச்சு

Published By: Digital Desk 4

17 Dec, 2020 | 03:53 PM
image

(க.பிரசன்னா)

பாடசாலை நூலகங்களுக்குப் பொருத்தமான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்நூல்களிற்கு நூலக அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி அச்சிடப்பட்ட நூல்கள், கையெழுத்து பிரதிகளை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனைச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மொழி மற்றும் இலக்கியம், மதம், சிறுவர் கதைகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல், தகவல் தொழில்நுட்பம், அழகியல், சமூகக்கல்வி, கல்விசார் பெறுமதிமிக்க ஏனைய படைப்புகள், மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் ஆகிய துறைகளின் கீழ் நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் கோரப்பட்டுள்ளன.

ஏற்கனவே அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நூல்களிற்கு அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலப்பகுதியானது, அது வழங்கப்பட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகள் நிறைவுபெறும் திகதி வரை மட்டுமே ஆகும். அதன் பிரகாரம் இதுவரையில் பெற்றுள்ள அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கும் சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நூலக அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமுள்ள நூலாசிரியர்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்கள் வாரத்தின் திங்கட் கிழமைகளில் கல்வி அமைச்சின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனைச் சபையிடம் உரிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0112784839 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பினை ஏற்படுத்த முடியும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06