மாகாண சபை தேர்தல் நாட்டுக்கு அவசியம் - வாசுதேவ

Published By: Digital Desk 3

17 Dec, 2020 | 09:41 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகண சபை தேர்தலை நடத்தும் காலம், தேர்தல் முறைமை ஆகியவற்றை  தீர்மானிக்கும் பொறுப்பு  அரசியல் கட்சி  தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நாட்டுக்கு அவசியம் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில்  நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல்  குறித்து தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்தும் முயற்சிக்கு அமைய கடந்த அமைச்சரவை கூட்டத்தில்  மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரால் யோசனை  முன்வைக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தலை எந்த தேர்தல் முறைமையில் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. மாகாண சபை தேர்தலை நடத்தும் திகதி,  மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில்  ஆராயும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமை சிறந்த நோக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆகையால் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது அவசியமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சிறந்த முறையில் செயற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும்,  பாதிக்கப்படுவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மேலதிகமாக 900 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ்- தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.

பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை இரத்து செய்ய முடியாது. ஆனால் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவி நிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.

மின்சாரத்துறையில் இடம் பெறும் முறைகேடுகளுக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தடையாக உள்ளது.ஆகையால் ஆணைக்குழு ஒருபோதும் நீக்கப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01