9 மாவட்டங்களில் 60 பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 11:11 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 34 000 ஐ கடந்துள்ள இதே வேளை 25 000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 9 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள் , கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புக்கள் உள்ளிட்ட 60 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று புதன்கிழமை மாலை 7 மணி வரை 326 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 447 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 25 652 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8638 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 499 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவான மரணங்கள்

இன்று புதன்கிழமை 3 கொரோனா மரணங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டன.  கொழும்பு – 14 பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த மூவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

9 மாவட்டங்களில் 65 பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டின் 9 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள் , தொடர் மாடி குடியிருப்புக்கள் , கிராம சேவகர் பிரிவுகள் உள்ளிட்ட 60 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளும் , 8 கிராம சேவகர்  பிரிவுகளும் , தொடர் மாடி குடியிருப்பொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  கம்பஹாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  கண்டியில் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறையில் பொலிஸ் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறையில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. காலியில் 7 , இரத்தினபுரியில் 1 மற்றும் மொனராகலையில் 1 என கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08