உயர் நீதிமன்ற கட்டடத்தில் திடீர் தீ பரவல் : குற்றப்புலனாய்வு பிரிவின் 3 குழுக்கள் விசாரணை

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 11:00 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

தீ பரவியமை தொடர்பில் நிர்வாகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

மின் பொறியியலாளர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன், இன்றும் இரசாயன பகுப்பாய்வாளரினால் பரிசோதனைகள் இடம்பெற்றன.

உயர் நீதிமன்ற கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள களஞ்சியசாலையிலேயே குறித்த தீ பரவியது. தீயினால் ஆவணங்களுக்கு சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38