உயர்நீதி மன்ற கட்டட தொகுதியில் ஏற்பட்ட தீயில் சந்தேகம்: மனுஷ நாணயக்கார

Published By: J.G.Stephan

16 Dec, 2020 | 05:46 PM
image

(எம்.மனோசித்ரா)
உயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டமையை சாதாரணமாகக் கருத முடியாது. யாரேனுமொரு முக்கியஸ்தரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக உயர்நீதி மன்ற கட்டட தொகுதியில் தீப்பரவல் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டமையை சாதாரணமாகக் கருத முடியாது. திடீரென தீப்பரவல் ஏற்பட்டிருந்தாலும் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் கடும் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக நாம் குறித்த பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இலங்கை வரலாற்றில் இவ்வாறு முக்கிய கட்டட தொகுதிகள் தீபற்றியிருந்தால் அதன் பின்னிணியில் ஏதேனுமொரு காரணி இருக்கும் என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளது.

யாரேனுமொருவரை வழக்கிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான  திட்டமிட்ட  செயலாகக் கூட இது காணப்படலாம். மக்கள் மத்தியில் இது தொடர்பில் கடும் சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் யாரேனுமொருவரால் தீப்பரவல் ஏற்பட்டுத்தப்பட்டிருக்குமாயின் அந்த முயற்சியிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் நாட்களில் இதற்கான உண்மையாக காரணம் வெளிப்படுத்தப்படும்.

உயர் நீதிமன்றம் தீப்பற்றிய இந்த திகதியும் வரலாற்று முக்கியத்துவமுடையதாகும். 2018 டிசம்பர் 14 ஆம் திகதி 52 நாட்கள் சூழ்ச்சி அரசாங்கத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. 15 ஆம் திகதி முறையற்ற வகையில் நியமிக்கப்பட்ட பிரதமரான மஹிந்த ராஜபக்ச தானாக பதவி விலகிய தினமாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நாட்டில் தற்போது கட்சிகள் என எவையும் இல்லை. மாறாக இரு மக்கள் கூட்டங்களே காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஜனநாயக ரீதியானதும் , மனித உரிமைகளை மதிக்கின்றதுமாகும். மற்றையது அதற்கு எதிரானதாகும். அவற்றினடிப்படையில் 69 இலட்சம் மக்கள் எவ்வாறு ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்பதை தற்போது உணர்ந்திருப்பார்கள்.

வாழ்வில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்காமல் , ஹில்டன் போன்ற ஹோட்டல்களை மேலும் நவீனமயப்படுத்த கோடிக்கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது 69 இலட்சம் மக்கள் தாம் எடுத்த முடிவு சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04