இலங்கை முஸ்லிம்களை மாலைதீவிற்கு அழைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் துன்யா மஹ்மூன்

Published By: J.G.Stephan

16 Dec, 2020 | 04:30 PM
image

(நா.தனுஜா)
இலங்கை முஸ்லிம்கள் மாலைதீவிற்கு வந்து, இங்கு அவர்களுடைய வாழ்வை முன்னெடுப்பதற்கு நாம் அழைப்புவிடுக்க வேண்டும் என்றே கருதுகின்றேன். எனினும் எமது அரசாங்கம் இன்னமும் அதனைச் செய்யாமை குறித்து ஆச்சரியமடைகின்றேன் என்று மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் துன்யா மஹ்மூன் தெரிவித்திருக்கிறார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அரசாங்கம் மாலைதீவிடம் இத்தகைய கோரிக்கையொன்றை விடுத்திருந்ததா என்ற கேள்விக்கு, அமைச்சரவையில் இதுபற்றி ஆராயப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல பதிலளித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, இந்த சர்ச்சை தொடர்பில் மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் துன்யா மஹ்மூன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருப்பதுடன், இலங்கை முஸ்லிம்கள் மாலைதீவில் வாழ்வதற்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

'இலங்கை முஸ்லிம்கள் மாலைதீவிற்கு வந்து, இங்கு அவர்களுடைய வாழ்வை முன்னெடுப்பதற்கு நாம் அழைப்புவிடுக்க வேண்டும் என்றே கருதுகின்றேன். எனினும் எமது அரசாங்கம் இன்னமும் அதனைச் செய்யாமை குறித்து ஆச்சரியமடைகின்றேன். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் தமது அன்பிற்குரியவர்களுக்கான இறுதிக்கிரியைகளை தமது மதநம்பிக்கையின்படி நடத்துவதற்கு விரும்பும் சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்' என்று துன்யா மஹ்மூன் அந்தப் பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21