பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் - ரோசி சேனாநாயக்க

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 04:59 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம் நடந்துகொள்ளவேண்டும். பொறுப்புடன் செயற்பட்டால்  மேலும் கொரோனா அலைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெற போகும் ரோசி சேனாநாயக்க - Tamilwin

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலங்களில் மேல் மாகாணத்தில் மக்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துவரும் எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா இரண்டாவது அலையில் கொழும்பு மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் கொழும்பு மாநகர எல்லையிலே தொற்றாளர்கள் மற்றும் மரண வீதம் அதிகரித்திருக்கின்றது. தற்போது இந்த நிலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது. 

வைத்தியர்களின் தரவுகளின் பிரகாரம் மொத்த தொற்றாளர்களில் 80வீதம் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி  இருந்தபோதும் தற்போது அது 69வீதமாக குறைவடைந்திருக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருடத்தின் போது மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிரமத்துக்கு மத்தியில் கட்டுப்படுத்திவரும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இல்லாவிட்டால் மேலும் பல அலைகள் உருவாகலாம். இதற்கு இடமளிக்கக்கூடாது. குறிப்பாக கொழும்பு மக்கள் தங்களது தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும். 

மேலும் சுகாதார அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலின் பிரகாரம் எமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும். கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு மாநகரசபையால் பாரிய சேவை மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை 70ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகித்திருக்கின்றோம். மேலும் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22